உலகம்

யாகி சூறாவளியினால் வியட்நாமில் பலி எண்ணிக்கை 63 -ஆக உயர்வு

10/09/2024 06:49 PM

ஹனோய், 10 செப்டம்பர் (பெர்னாமா) --  வியட்நாமின் வட பகுதிகளில் வீசிய யாகி சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.

40 பேரை இன்னும் காணவில்லை என்பதால் அவர்களைத் தேடி மீட்கும் பணி தொடரப்பட்டு வருகிறது.

சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகிய இயற்கை பேரிடர்களால், 752 பேர் காயமுற்றதாகவும் அந்நாட்டின் விவசாய அமைச்சு தெரிவித்திருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில் வியட்நாமில் வீசிய மிக வலிமையா சூறாவளியாக யாகி சூறாவளி கருதப்படுகிறது.

மணிக்கு 149 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய யாகி சூறாவளியினால் பாலங்கள் சேதமுற்றன, வீடுகள் மற்றும் கட்டங்களின் கூரைகள் பறந்தன.

வடக்கு பகுதிகளில் கடுமையான  வெள்ளமும் ஏற்பட்டது. இதனால் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

ஆற்றின் அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)