விளையாட்டு

பார்சிலோனா பொது டென்னிஸ்; இறுதி ஆட்டத்திற்கு அல்கராஸ் தேர்வு

20/04/2025 05:07 PM

பார்சிலோனா, 20 ஏப்ரல் (பெர்னாமா) -- பார்சிலோனா பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு, உலகின் முதல் நிலை விளையாட்டாளர் கார்லோஸ் அல்கராஸ் தேர்வாகினார்.

இப்போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு மூன்றாவது முறையாக முன்னேறியிருக்கும் அவர், டென்மார்க்கின் ஹோல்கர் ரூனேவுடன் விளையாடவுள்ளார்.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அல்கராஸ், பிரான்சின் ஆர்தர் ஃபெல்சுடன் விளையாடினார்.

இவ்வாட்டத்தில் 6-2, 6-4 என்ற நேரடி செட்களில் எளிதாக வெற்றி பெற்று அல்கராஸ் இறுதி ஆட்டத்திற்கு செல்லும் தமது பயண சீட்டை வென்றுள்ளார்.

மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஹோல்கர் ரூனே, இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

ரஷ்யாவின் கரேன் கச்சனோவுடன் விளையாடிய அவர், 6-3, 6-2 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.

இறுதிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் இந்த இரண்டு திறமையான இளம் வீரர்களின் விளையாட்டைக் காண ஆவலுடன் உள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)