பொது

பொது சேவை துறையில் கையாள வேண்டிய சவால்களில் பிரித்தாளும்தன்மையும் அரசு நிர்வாக நடைமுறைகளும் அடங்கும்

10/09/2024 07:43 PM

புத்ராஜெயா, 10 செப்டம்பர் (பெர்னாமா) -- பொது சேவை துறையில் கையாள வேண்டிய முதன்மை சவால்களில் பிரித்தாளும்தன்மையும் அரசு நிர்வாக நடைமுறைகளும் அடங்கும்.

திறமையான மற்றும் ஆக்கப்பூர்வமான அரசாங்க சேவை வழங்கப்படுவதை உறுதிசெய்ய இது அவசியம் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்தார்.

மேம்பாட்டு திட்டங்களை அங்கீகரிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் அளவிற்கு சில அரசாங்க நிறுவனங்களில் இந்தப் போக்கு இன்னும் வலுவாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று, புத்ராஜெயா, புஸ்பானிதாபூரியில் 2024ஆம் ஆண்டு தலைமைத்துவ கொள்கை நிகழ்ச்சியை முன்னிட்டு உரையாற்றியபோது ஷம்சுல் அவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்க சேவை வழங்குவதில் இன்னும் ஆக்கப்பூர்வமற்ற மற்றும் போட்டியாற்றல் இல்லாத பழைய முறைகள் பயன்படுத்தப்படுவதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)