விளையாட்டு

2024 பாரிஸ் பாராலிம்பிக்கை முடித்துக்கொண்டு மலேசிய குழுவினர் நாடு திரும்பினர்

11/09/2024 05:49 PM

பாரிஸ், 11 செப்டம்பர் (பெர்னாமா) --  2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளை முடித்துக்கொண்டு மலேசிய குழுவினர் நேற்றிரவு நாடு திரும்பினர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 1-க்கு வருகைத் தந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது.

செப்டம்பர் 8-ஆம் தேதி நிறைவடைந்த பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டிகளில் நாட்டின் நம்பிக்கையை சுமந்த சென்ற மலேசிய வீரர்கள் இரு தங்கம், இரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களோடு தாயகம் திரும்பினர்.

பாராலிம்பிக்கிற்கான மலேசியக் குழுவின் தலைவர் டத்தோ ஆர். சுப்ரமணியம் மற்றும் பூப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீயா லைக் ஹோ மற்றும் சரவாக்கின் போனி புன்யாவ் கஸ்டின் ஆகியோர் தலைமையிலான தேசியக் குழு இரவு மணி 8-க்கு கோலாலம்பூரை வந்தடைந்தனர்.

மேலும், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ, அமைச்சின் செயலாளர் டாக்டர் கே. நகுலேந்திரன் ஆகியோரும் அங்கு வருகை புரிந்திருந்தனர்.

4 தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய மலேசியா இரு தங்கம், இரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்துடன் பட்டியலில் 42-வது இடத்தில் போட்டியை நிறைவுச் செய்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)