பொது

சீனி தடுப்பு பிரச்சாரத்திற்கான 'JOM KOSONG' திட்டம் தொடக்கம்

11/09/2024 07:28 PM

கோலாலம்பூர், 11 செப்டம்பர் (பெர்னாமா) -- உணவு தொழில்துறையைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கேபிடிஎன் சீனி தடுப்பு பிரச்சாரத்திற்கான 'Jom Kosong' என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

அதன் தொடக்கக்கட்ட நடவடிக்கையாக, வரும் அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி ரஹ்மா மடானி விற்பனை திட்டத்தில் கழிவு வழங்கப்படும் பொருட்கள் பட்டியலில் இருந்து, சீனி கொண்ட உணவு மற்றும் பானங்கள் நீக்கப்பட்டுள்ளதாக கேபிடிஎன் துணை அமைச்சர் செனட்டர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க சீனி இல்லாத பானங்களைத் தேர்ந்தெடுக்க பயனீட்டாளர்களுக்கு ஊக்குவிக்க இம்முயற்சி மேற்கொள்ளப்படவிருப்பதாக அவர் கூறினார்.

மேலும், பயனீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நடவடிக்கையாக சீனி கொண்ட பொருட்களுக்கு 'கிரேட்' வைப்பது உட்பட இதர வியூகங்களைச் செயல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சுடன் கேபிடிஎன் ஒத்துழைப்பை மேற்கொள்ளவிருக்கிறது.

இன்று, கோலாலம்பூரில் 'Jom Kosong' திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் ஃபுசியா அவ்வாறு குறிப்பிட்டார்.

'Jom Kosong' திட்டம், நாடு முழுவதிலும் 4,700கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவன சங்கம், SAMENTA-வையும் உள்ளடக்கியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)