உலகம்

கனடிய கடற்பகுதியில் திமிங்கலம் காப்பாற்றப்பட்டது

14/09/2024 08:05 PM

கனடா, 14 செப்டம்பர் (பெர்னாமா) -- கனடிய கடற்பகுதியில் மீன்பிடி பாதையில் சிக்கிக் கொண்ட திமிங்கலம் ஒன்றை, மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர்.

கடற்பகுதியில் மீன்பிடி பாதையில் உள்ள கயிறு, அந்த திமிங்கிலத்தின் உடல் முழுதும் மாட்டிக் கொண்ட வேளையில், மீட்புக் குழுவினர் அவற்றை வெட்டி அந்த திமிங்கிலத்தை விடுவித்துள்ளனர்.

கடந்த 2-ஆம் தேதி முதல் நான்கு நாட்களாக அந்த திமிங்கிலம் மீன்பிடி பாதையில் உள்ள கயிற்றில் சிக்கிக் கொண்டுள்ளது.

அதை விடுவிக்க, 50-க்கும் மேற்பட்ட கயிறுகளை வெட்ட வேண்டி இருந்தது.

ஹம்பேக் வகையிலான இதுபோன்ற திமிங்கிலங்கள் 14 மீட்டர் நீலம் மற்றும் 45 டன்கள் எடை வரை வளரும் ஆற்றல் கொண்டவை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)