பொது

ஒதுக்கீட்டை ஏற்பது எதிர்க்கட்சியைப் பொருத்தது

15/09/2024 07:18 PM

ஷா ஆலம், 15 செப்டம்பர் (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கம் பல ஆய்வுகளை மேற்கொண்டே எதிர்க்கட்சிக்கான இந்த ஒதுக்கீட்டை பரிந்துரைத்துள்ளது.

அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் சம்பந்தப்பட்ட அத்தரப்பைப் பொருத்தது என்று துணை பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இந்நிலையில், இதன் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டாலும், அது சம்பந்தப்பட்ட அந்தப் பரிந்துரையை உட்படுத்தியே அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று, கோலாலம்பூரில் உள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் 78ஆவது பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்தப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாரு குறிப்பிட்டார்.

இதனிடையே, அனைத்து உணவகங்களும், உணவு மற்றும் பானம் தொழில்துறையினரும் ஹலால் சான்றிதழுக்காக கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பதை அவர் கோடி காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)