வாஷிங்டன் டி.சி., மார்ச் 04 - ஈரானைத் தாக்குவதற்கு அமெரிக்க விமானங்கள் தனது தளத்தைப் பயன்படுத்த ஸ்பெயின் தடை விதித்ததைத் தொடர்ந்து அந்நாட்டுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிப்பதாக டோனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஸ்பெயினைத் தவிர்த்து, வாஷிங்டனுடன் முழுமையாக ஒத்துழைக்காததால், பிரிட்டன் மீதான தமது அதிருப்தையையும் டிரம்ப் விமர்சனங்களாக வெளிப்படுத்தினார்.
''ஸ்பெயினைப் பற்றிப் பேசினோம். நாளை அல்லது இன்று இன்னும் விரைவாக அதன் தொடர்புடைய அனைத்தையும் நிறுத்த முடியும். குறிப்பாக தொடர்புடைய அனைத்து வணிகங்களையும் நிறுத்துவதற்கு உரிமை உண்டு. எனக்கு வேண்டிய எதையும் நான் செய்யலாம். எனவே, அதை நான் ஸ்பெய்னிடம் செய்வேன். இங்கிலாந்தும் அப்படி செய்தது எனக்கு இரண்டாவது அதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால், இது சர்ச்சிலின் காலம் அல்ல. அவர்கள் வைத்திருக்கும் அந்த மதிகெட்ட தீவோடு இங்கிலாந்து ஒத்துழைக்க மறுப்பதாக என்னால் கூற முடியும்,'' என்றார் அவர்.
செவ்வாய்க்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் அவ்வாறு கூறினார்.
ஈரானைத் தாக்குவதற்கு இராணுவ தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்கப்பட்டாது குறித்து, ஸ்பெயின், அதன் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மெனுவல் அல்பெராஸ் மூலம் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்னதாக வெளிப்படுத்தி இருந்தது.
இச்சூழ்நிலையில் குறைந்தது ஏழு அமெரிக்க விமானங்கள் ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டெய்ன் விமானத் தளத்தில் தரையிறங்கின.
உலகப் போர்களிலும், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களிலும் அமெரிக்காவின் தீவிர பங்காளியாக இருந்த பிரிட்டனும் ஈரான் மீதான தாக்குதலில் இணைய மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)