பொது

அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த துன் ச.சாமிவேலுவின் நினைவு நாள்

15/09/2024 07:22 PM

ஷா ஆலாம், 15 செப்டம்பர் (பெர்னாமா) --  மலேசிய அரசியல் வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரியைப் பதித்து, கர்ஜனையோடு வளம் வந்த துன் ச. சாமிவேலுவின் 2-ஆவது நினைவு நாள் இன்று.

30 ஆண்டுகள் அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்து, நாட்டின் அபரிமிதமான வளர்ச்சிக்கு, சொல்லால் வர்ணிக்க முடியாத பங்களிப்பை இந்திய சமுதாயத்திற்கு நல்கி வந்தார்.

அவரின் அர்ப்பணிப்புகளை நினைவுக்கூறும் வகையில், இன்று நடைபெற்ற 78-ஆவது மஇகா பொது பேரவையில் திரையிடப்பட்ட துன் ச. சாமிவேலுவின் காணொளி தொகுப்பு மனதை நெகிழ செய்தது.

தமது தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் தூணாக நின்று வாழ்வுக் கொடுத்தவர் அரசியல் சிகரம் துன் ச. சாமிவேலு என்று மஇகா தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

சாமிவேலுவின் பாதச் சுவடைப் பின்பற்றியே தமது அரசியல் வாழ்க்கையை அமைந்த அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டார்.

"காலம் சென்ற துன் அவர்கள் எங்களுக்கு தந்தையராக மட்டுமல்ல தலைவராக மட்டுமல்ல எங்களை பெரிய அளவுக்கு படிக்க வைத்தது முதற்கொண்டு அரசியலில் கொண்டு வந்து இருவரையும் என்னையும் டத்தோ ஶ்ரீ சரவணனையும். எங்களுக்கு இந்த கட்சியைத் தலைவர்களாக துணைத் தலைவர்களாக வழிநடத்த தேர்வு செய்தது நீங்களாக இருந்தாலும், அதற்கான வாய்ப்பைக் கொடுத்தது துன் ச. சாமிவேலு", என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக பல்வேறு சாதனைகள் படைத்த துன் சாமிவேலுவின் மறைவு, தங்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு என்று இன்று அவரின் நினைவலைகள் விக்னேஸ்வரன் பகிர்ந்து கொண்டார்.
  
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)