விளையாட்டு

2ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கும் ஶ்ரீ பகாங்

16/09/2024 06:18 PM

தெமர்லோ, 16 செப்டம்பர் (பெர்னாமா) --  சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டி.

நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் PDRM FC அணியை 5-1 என்ற கோல்களில் தோற்கடித்து, ஶ்ரீ பகாங் இப்பருவத்தில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

முதல் பாதி ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் ஶ்ரீ பகாங் முதல் கோலை அடித்து கோல் வேட்டையைத் தொடங்கியது.

அதன் 25 மற்றும் 26-வது நிமிடங்களில் தொடர்ச்சியாக இரண்டு கோல்களை அடித்து ஶ்ரீ பகாங் முன்னணி வகித்தது.

ஆறு நிமிடங்கள் கழித்து ஸ்டெபனோ பர்ண்டோ, ஶ்ரீ பகாங் அணிக்கு நான்காவது கோலை அடித்தார்.

46 நிமிடத்தில் தனது 5-வது கோலை அடித்து ஶ்ரீ பகாங் தனது வெற்றியை உறுதி செய்து கொண்டது.

பி. மணியம் தலைமையிலான PDRM அணி, 71-வது நிமிடத்தில் தனது ஒரே ஆறுதல் கோலை அடித்தது.

இந்த வெற்றியின் வழி ஶ்ரீ பகாங் புள்ளிப்பட்டியலில் ஏழாது இடத்திற்கு முன்னேறியது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)