உலகம்

ஷாங்காய் & ஷிஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளியால் நிலச்சரிவு ஏற்பட்டது.

16/09/2024 07:21 PM

ஷாங்காய், 16 செப்டம்பர் (பெர்னாமா) --  திங்கட்கிழமை, சீனா ஷாங்காய் மற்றும் ஜெஜியாங் மாகாணத்தில் ஏற்பட்ட பெபின்கா சூறாவளியால் அப்பகுதியில்  நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.

பேருந்து சேவை மற்றும் விமானப் பயணத்தில் தடை ஏற்பட்டதோடு கப்பல்கள் இடம் மாற்றப்பட்டன.

மேலும், சம்பந்தப்பட்ட வட்டாரம் முழுவதிலும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

1949-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஷாங்காய் மாகாணத்தைத் தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியாக பெபின்காவை வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இச்சூறாவளியினால், 414,000கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


ஆஸ்திரியா

இதனிடையே, நேற்று காலை, ஆஸ்திரியாவில் பெய்த கனத்த மழையால், அதன் பெரும்பாலான இடங்கள் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வியன்னாவில் உள்ள வியன் நதியின் நீர்மட்டம் அதிகரித்து நகரத்தை கடந்திருப்பதால், சில நிலத்தடி பாதைகள் மூடப்பட்டதுடன், அந்நகரத்தைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைகளும் ரயில் இணைப்பு சேவைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

எனினும், செவ்வாய்க்கிழமை வரையில் வானிலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தொடர் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


நைஜீரியா

மற்றொரு நிலவரத்தில், கடந்த வார தொடக்கத்தில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மைடுகுரி சிறைச்சாலையின் சுவர்கள் வெள்ளத்தின் காரணமாக இடிந்து விழுந்ததில் 281 கைதிகள் தப்பிச் சென்றதை சிறை அதிகாரிகள் உறுதிச் செய்தனர்.

தப்பியோடிய கைதிகளில் எழுவர் பாதுகாப்பு நிறுவனங்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் வழி மீண்டும் பிடிபட்டனர்.


பிரேசில்

பிரேசிலில் உள்ள அமேசான் காட்டுப் பகுதி முழுவதிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டிருப்பதால், அங்குள்ள குடியிருப்பாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அம்மாநிலத்தின் தலைநகர் மனாவ்ஸுக்கு அருகில் உள்ள மனசபுரு நகரத்தின், சொலிமோஸ் ஆற்றின் வழி செல்லும் அமேசான் ஆற்றில் தான் நகரத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு செல்லும் போக்குவரத்துக்கான வழியாக இருந்தது.

வறட்சியினால், உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வருவதற்கான தளவாடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, மீன், வாழைப்பழம், மரவள்ளிக்கிழங்கு போன்ற உள்ளூர் பொருட்களுக்கான போக்குவரத்திலும் தடை ஏற்பட்டு, ஆற்றின் கரை பகுதியில் படகுகள் நிறுத்தப்பட்டு காட்சியளிக்கின்றன.


மெக்சிகோ

மெக்சிகோவின் சினாலோவா மாநிலத்தில் உள்ள குலியாகன் நகரின் சாலையின் தெற்கு பகுதியில் அடையாளம் தெரியாத ஐந்து ஆடவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அந்த உடல்களில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததற்கான காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், போலீசாரும் சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த நிபுணர்களும் விசாரணை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)