பார்சிலோனா, 21 ஏப்ரல் (பெர்னாமா) -- பார்சிலோனா பொது டென்னிஸ் போட்டியின் பட்டத்தைக் கைப்பற்றினார் டென்மார்க்கின் ஹோல்கர் ரூன்.
நேற்று நடந்த இறுதியாட்டத்தில் கார்லஸ் அல்கராசின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஹோல்கர் ரூன் இவ்வாண்டின் தமது முதல் பட்டத்தை வென்றுள்ளார்.
உலகின் முதல் நிலை விளையாட்டாளரான ஸ்பெய்னின் கார்லஸ் அல்கராஸ் கடந்த வாரம் மொன்டெ கார்லொ மற்றும் கத்தலொனியாவில் டென்னிஸ் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிக் கண்டிருந்தார்.
இப்போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு மூன்றாவது முறையாக அல்கராஸ் முன்னேறி இருக்கும் வேளையில் தொடர்ச்சியாக மூன்றாவது பட்டத்தையும் வெல்வார் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், கடும் போட்டிக்குப் போட்டிக்குப் பின்னர் அவர் ஹோல்கர் ரூனிடம் நேரடி செட்களில் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
முதல் செட்டில் 7-6 என்ற நிலையில் வீழ்ந்த அல்கராஸ் இரண்டாம் செட்டில் விளையாடும்போது இடுப்பில் வலி ஏற்பட்டு கிச்சை பெற்றுக் கொண்டார்.
ஆயினும், சிறந்த அடைவு நிலையை வெளிப்படுத்த முடியாமல் அவர், 6-2 எனும் நிலையில் அவர் தோல்வி அடைந்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]