கோலாலம்பூர், 21 ஏப்ரல் (பெர்னாமா) -- போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு MyDigital ID செயலி பயன்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை உள்துறை அமைச்சு முன்வைத்துள்ளது.
அச்செயலின் பயன்பாடு கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும், வரும் காலங்களில் அதன் பயன்பாட்டை அதிகரிக்க ஊக்குவிக்கப்படுவதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இன்று, கோலாலம்பூரில், அரச மலேசிய போலீஸ் படை ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் கலந்துகொண்ட உரையாற்றியபோது அவர் அதனைக் கூறினார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]