உலகம்

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ; தொழிலாளர்கள் வெளியேற்றம்

18/09/2024 05:43 PM

ஏதென்ஸ், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- கிரேக்கம், ஏதென்சின் மேற்கு பகுதியின் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று தீ பிடித்தது.

கரும் புகை மேல் எழும்பிய காரணத்தினால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைப்பதற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கடுமையாகப் போராடினர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 11 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன.

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அப்பகுதியை விட்டு வெளியேறும்படி குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலை அருகில் உள்ள நெடுஞ்சாலையும் போக்குவரத்துக்கு மூடப்பட்டது.

மேலும், இரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)