விளையாட்டு

வருங்காலத்தில் ஹரிமாவ் மலாயா தன்னிச்சையாக செயல்பட விரும்பினால் AFC அதனைத் தடுக்காது

18/09/2024 05:48 PM

கோலாலம்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- எதிர்காலத்தில் ஹரிமாவ் மலாயா தன்னிச்சையாக செயல்பட விரும்பினால் ஆசிய காற்பந்து சம்மேளனம் AFC, அதனை தடுக்காது.

இருப்பினும், தேசிய காற்பந்து அணி மலேசிய காற்பந்து சங்கம், FAM-இன் பொறுப்பில் இருக்க வேண்டும் என்று AFC தலைமை செயலாளர் டத்தோ ஶ்ரீ விண்ட்சர் ஜான் வலியுறுத்தியிருக்கிறார்.

"செயல்படுத்தப்படும் எந்தவொரு திட்டமும் எஃப்.ஏ.எம்.-இன் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். எஃப்.ஏ.எம்-இன் பொறுப்பின் கீழ் இருக்க வேண்டும். காரணம் ஏ.எஃப்.சி, ஃபிஃபா அல்லது எந்தவொரு வெளிப்புற அமைப்புகளுடன் எஃப்.ஏ.எம் தொடர்பு கொள்ளும். ஒரு நிறுவனம் அல்லது மற்றொரு நிர்வாகம் அல்ல. தலைமை செயலாளரின் கையொப்பத்தை மட்டுமே நாங்கள் கணக்கில் கொள்வோம்," என்றார் அவர்.

1997-ஆம் ஆண்டு உலக இளையோர் காற்பந்து போட்டியை மலேசியா ஏற்று நடத்திய போது, தனியார் தரப்பு அதில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியா காற்பந்து அணி சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான் துவாங்கு மக்கோத்தா இஸ்மாயில் அண்மையில் சமூக ஊடகம் வழியாக தெரிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)