பொது

பலாபேஸ் ஷம்சுல் மரணம்; 3 பயிற்றுனர்கள் குற்றச்சாட்டை மறுத்தனர்

27/02/2026 02:58 PM

கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்தாண்டு ஜூலை மாதம், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பலாபேஸ் பயிற்சியாளரான ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடினின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக, இன்று ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மூவர் பயிற்றுனர்கள் மறுத்தனர்.

மலேசிய இராணுவப் படை, அதிகாரிகளான 40 வயதுடைய மேஜை முஹமட் அஸ்மி அபு பக்கார் 41 வயதுடைய waran அதிகாரி முஹமட் நோர்புவாங் கானி  மற்றும் கேப்டன் முஹமட் பஹாருடின் ரஷிட்  ஆகியோரே அம்மூவர் ஆவர்.

22 வயதுடைய ஷம்சுல் ஹரிஸ்-க்கு மரணம் ஏற்படும் அளவிற்கு அவருக்கு காயங்கள் விளைவிக்கும் நோக்கத்துடன் அம்மூவரும் ஒன்றிணைந்து செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Lapang Sasar Ulu Tiram Utara-வில் கடந்தாண்டு ஜூலை 28-ஆம் தேதி பிற்பகல் மணி இரண்டிலிருந்து மூன்றுக்குள் அவர்கள் அக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் Seksyen 304(a) உடன் வாசிக்கப்பட்ட அதேச் சட்டம் Seksyen 34-இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஒவ்வொருவரும் தலா 20,000 ரிங்கிட் ஜாமின் மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கடப்பிதழ்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)