உலகம்

உடல் எடையைக் குறைக்கக் கூடிய சில பொருட்களை சிங்கப்பூர் தடை செய்தது

18/09/2024 06:27 PM

சிங்கப்பூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- உடல் எடையைக் குறைக்கக் கூடிய சில பொருட்களை சிங்கப்பூர் உணவு நிறுவனம், எஸ்.எஃப்.ஏ தடை செய்துள்ளது.

அதில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Unique Good Morning Candies மற்றும் Unique Good Night Candies எனும் பொருட்களும் அடங்கும்.

மேலும் ஜப்பானின் Sausando Slimming Coffee மற்றும்  Sausando Slimming Tea பொருட்களும் தடை செய்யப்பட்டதாக எஸ்.எஃப்.ஏ கூறியுள்ளது.

"சந்தையில் கிடைக்கும் இந்த நான்கு பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம். இதில் தடைசெய்யப்பட்ட இரசாயனம் உள்ளது.

அவை இணையத் தளங்கள் மூலம் விற்கப்படுகின்றன. அவை கொழுப்பைக் குறைப்பதாகவும், பசியை அடக்கி கட்டுப்படுத்துவதாகவும் விளம்பரம் செய்யப்படுகிறது," என்று எஸ்.எஃப்.ஏ தெரிவித்தது.

அப்பொருட்கள் குறித்த தகவல்களை உடனடியாக இணையத் தளங்களில் இருந்து நீக்கவும், அதனை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறும் விற்பனையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்பொருட்களை உட்கொள்வதன் மூலம், உடலில் பல உபாதைகள் ஏற்படும் என்று எஸ்.எஃப்.ஏ எச்சரித்திருக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)