நியூ யார்க், 01 மார்ச் (பெர்னாமா) -- ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. கடுமையான கண்டிருத்திருக்கிறது.
மிகப் பெரிய மோதலைத் தவிர்க்க உடனடியாக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு, ஐ.நா பொது செயலாளர் அந்தோணியோ குட்டெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
"அனைத்துலக சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்டம் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். அதனால்தான் இன்று காலை முதல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்களை நான் கண்டித்து வருகிறேன். மேலும் பஹ்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு ஆகியவற்றின் இறையாண்மை மற்றும் வட்டார ஒருமைப்பாட்டை மீறிய ஈரானின் அடுத்தடுத்த தாக்குதல்களையும் நான் கண்டிக்கிறேன்," என்று அவர் கூறினார்.
பதற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க, உடனடி முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று, ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் அவசரக் கூட்டத்தில், குட்டெரெஸ் தெரிவித்தார்.
மோதலால் நீடிக்கும் பதற்றங்கள் பொதுமக்கள் மற்றும் உலக நாடுகளின் நிலைத்தன்மைக்குக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)