உலகம்

பாலஸ்தீனத்தில் சட்டவிரேதமாக இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ஐ.நா

19/09/2024 07:50 PM

நியூ யார்க், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- பாலஸ்தீனத்தில் கொண்டிருக்கும் சட்டவிரேத ஆக்கிரமிப்பை 12 மாதங்களுக்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இஸ்ரேலை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த தீர்மானத்திற்கு 124 உறுப்பு நாடுகள் ஆதரவாகவும் 14 நாடுகள் எதிராகவும் மற்றும் 43 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தும் இருக்கின்றன.

பாலஸ்தீனம் தலைமையிலான இந்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையில் இந்தியா உள்ளிட்ட 43 நாடுகள் அத்தீர்மானத்தை புறக்கணித்திருக்கின்றன.

மேலும் இந்த தீர்மானத்தில், பாலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம், ஐ.சி.ஜே பிறப்பித்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அனைத்துலக சட்டத்தையும் மீறுவதாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேளையில் ஐ.நா சாசனத்தின் கீழ் பாலஸ்தீன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1967-இல் தொடங்கிய இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அவசரத் தேவையை வலியுறுத்துவதோடு, பாலஸ்தீனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது ஐ.நாவின் நிரந்தரப் பொறுப்பாகும் என்பதை அந்த தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதில், அனைத்துலக நீதிமன்றம், I-C-J பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த முன் வந்திருக்கும் ஐநாவின் முடிவை மலேசியா வரவேற்றுள்ளது.

இதனிடையே, பாலஸ்தீனத்தில் மீண்டும் அமைதியை நிலைநாட்டுவது அனைத்து நாடுகளின் மற்றும் அனைத்துலக அமைப்புகளின் கூட்டுப் பொறுப்பு என்பது இதன் வழி வலியுறுத்தப்படுகிறது.

மலேசியா உட்பட 123 உறுப்பு நாடுகள, ஐநாவின் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

நீண்டகால பாலஸ்தீனப் பிரச்சனையில் மலேசியாவின் நிலைப்பாட்டை இந்தத் தீர்மானம் உறுதிப்படுத்துகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]