பொது

இல்லாத வேலை வாய்ப்பு மோசடி; கர்ப்பிணி உட்பட 11 பேர் மீது குற்றப்பதிவு

19/09/2024 08:04 PM

தைப்பிங், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இல்லாத ஒரு வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கர்ப்பிணி ஒருவர் உட்பட 11 பேர் இன்று தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

நீதிபதி நபிஷா இப்ராஹிம் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர்கள் அனைவரும் மறுத்தனர்.

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 420-இன் கீழ் குற்றம் பதிவாகியுள்ள நிலையில் அதேச் சட்டம் செக்‌ஷன் 511-உடன் அது வாசிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதேச் சட்டம் செக்‌ஷன் 120B (2)-இன் கீழ் தண்டனை விதிக்கப்படலாம்.

ஒவ்வொருக்கும் தலா 8,000 ரிங்கிட் ஜாமின் விதித்து அவர்களை விடுவித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதம் முதலாம் தேதி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது.

அதுமட்டுமின்றி, இவ்வழக்கு முடியும் வரை அவர்களின் கடப்பிதழும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 29 மற்றும் நவம்பர் எட்டாம் தேதிகளில் நிர்ணயிக்கப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]