பொது

26 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருள்கள் அழிப்பு

19/09/2024 08:09 PM

சரவாக், 19 செப்டம்பர் (பெர்னாமா) -- சரவாக் மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 26 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான மதிப்புடைய பல்வேறுவகை போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டுள்ளன.

1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் மற்றும் 1952-ஆம் ஆண்டு நச்சு சட்டம் ஆகியவற்றின் கீழ், 2017 தொடங்கி, இவ்வாண்டு வரையில் மொத்தம் 7,478 வழக்குகள் இது தொடர்பில் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சரவாக் போலீஸ் ஆணையர் டத்தோ மன்ச்சா அட்டா தெரிவித்தார்.

எக்ஸ்டசி, ஷாபு, கஞ்சா, கெத்தும் இலை, எரிமின் 5, நொஸ்பான், எக்ஸ்டசி மாத்திரைகள் போன்றவை இதில் அழிக்கப்பட்டதாக மன்ச்சா அட்டா தெரிவித்தார்.

அரச மலேசிய போலீஸ் படை நியமித்த Trienekens Sarawak நிறுவனத்தில் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை அந்த போதைப் பொருள்களை அழித்ததாக அவர் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]