பொது

GISBH: மேலும் எழுவர் கைது

20/09/2024 06:17 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- ஆள்கடத்தல் வழக்கு குறித்த விசாரணைக்கு உதவும் பொருட்டு, GISBH குழும நிறுவனத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஏழு ஆடவர்களை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட எழுவரில், அல்-அர்க்காம் இயக்கத்தின் முன்னாள் தலைவர் அஷாரி முஹமட்டின் மகனும் GISBH-யின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகனும் உள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

நேற்றிரவு தொடங்கி இன்று அதிகால வரையில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது GISBH-யின் சமூக பாதுகாப்பு இளைஞர் படையின் உறுப்பினர்களான 32 முதல் 35 வயதிற்குட்பட்ட அவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதை இன்று தொடர்புக் கொண்டபோது ரசாருடின் உறுதிப்படுத்தினார்.

அவர்கள் அனைவரும், இன்று தொடங்கி செப்டம்பர் 26-ஆம் தேதி வரையில் ஏழு நாள்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை தொடர்வதால், அவர்கள் ஷா ஆலமில் உள்ள தடுப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

2007-ஆம் ஆண்டு ஆள்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரின் கடத்தல் தடுப்பு சட்டம் செக்‌ஷன் 12-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]