பொது

ஹலால் தொழில்துறை தொடர்பான வியூகம் & சந்தைப்படுத்தும் முறைகளை இதர நாடுகளுடன் பகிர வேண்டாம்

20/09/2024 06:36 PM

கோலாலம்பூர், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- நாட்டில் ஹலால் தொழில்துறையினர் அத்துறை தொடர்பான வியூகம் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகளை இதர நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதன் வழி ஹலால் பொருள்கள் தயாரிப்பிலும் அதன் சான்றிதழ் உருவாக்கத்திலும் மலேசியா தொடர்ந்து முன்னணியில் இருக்க முடியும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஹலால் தொடர்பில் அதிகமான தகவல்கள் பகிரப்படுவதன் மூலம் இதர நாடுகள் மலேசியாவின் அணுகுமுறைகளை பின்பற்றும் சாத்தியம் இருப்பதால் 1974-ஆம் ஆண்டு தொடங்கி ஹலால் பொருள்களின் முன்னோடியாக இருக்கும் மலேசியாவின் நிலை பாதிக்கப்படாலாம் என அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]