உலகம்

சீனாவில் புலாசான் சூறாவளி

20/09/2024 07:04 PM

பெய்ஜிங், 20 செப்டம்பர் (பெர்னாமா) -- சீனாவை தற்போது புலாசான் சூறாவளி தாக்கியுள்ளது. 

முதலில் சிச்சியாங் Zhejiang மாநிலத்தைத் தாக்கிய சூறாவளி  நேற்றிரவு ஷங்ஹாய் Shanghai அருகே கரையைச் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

75 ஆண்டுகளில் வீசிய ஆக வலுவான யாகி புயலை எதிர்கொண்டு சில நாள்களே ஆன நிலையில் சீனா இன்னொரு சூறாவளியைச் சந்திக்கிறது.

அதேபோல், தற்போது சீனாவின் கிழக்கு வட்டாரம் அடைமழையில் அவதியுறுகிறது.

வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

புயலின் வேகம் தற்போது குறைந்து வெப்பமண்டலக் காற்றாக மாறிவிட்டதாக வானிலை அதிகாரிகள் கூறினர்.

பயணத்தைக் குறைக்கும்படியும் பாதுகாப்புக் கருதி வீட்டுக்குள் இருக்கும்படியும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புயல் காரணமாகக் குறைந்தது 350 கப்பல்கள் இடம் மாற்றப்பட்டன. சுமார் 20 கடலோரத் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

 

-- பெர்னாமா