கிள்ளான் , 01 நவம்பர் (பெர்னாமா) -- உடல்நலப் பிரச்சினைகளால் இன்னல்களை எதிர்நோக்கி வரும், சிலாங்கூர் கிள்ளான் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி குடும்பத்திற்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தொடர்ந்து உதவுவார்.
இருதய நோயால் அவதிப்படும் கணவனோடு, மருத்துவச் சிக்கல்களால் படுத்த படுக்கையாக இருக்கும் அப்பெண்ணுக்கு, அவரது அரசியல் செயலாளர் அஹ்மத் ஃபர்ஹான் ஃபௌஸி ஊடாக அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை தனது முகநூல் பதிவின் மூலம், அப்பெண்ணுக்குக் சில உதவிகள் வழங்கப்பட்டதாகவும், மேலும் இதர உதவிகள் வழங்கப்படும் என்றும் அன்வார் கூறினார்.
பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையோடு, அக்குடும்பம் நிலையான வருமானம் இல்லாமல் ஒரு சிறிய அறையில் வசித்து வருகிறது.
இன்னல்களை எதிர்கொள்வதில் அக்குடும்ப உறுப்பினர்கள் விடாமுயற்சியோடு செயல்படுவர் என்றும், வழங்கப்பட்ட உதவிகள் தீபாவளியைக் கொண்டாடுவதில் அவர்களுக்கு சிறு மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்று அன்வர் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)