உலகம்

பாகிஸ்தானில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மோசமான காற்றுத் தரப் பதிவு

05/11/2024 04:52 PM

லாகூர், 05 நவம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு காற்றுத் தர தூய்மைக்கேடு மோசமாக பதிவாகியிருப்பதால் விரைந்து நடிவடிக்கை  எடுக்குமாறு லாகூர் குடியிருப்பாளர்கள் அதிகாரிகளை வலியுறுத்தினர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் மற்றும் இந்திய எல்லைப் பகுதிக்கு அருகில் காற்றின் தரம் ஏறக்குறை 1,900 என்ற அளவில் பதிவானது.

அதோடு, மோசமான காற்றுத் தரப் பதிவைக் கொண்ட பகுதிகளில் இந்நகரமும் முதல் வரிசையில் உள்ளதாக  சுவிஸ் குழுமம் மேற்கொண்ட  IQAir தரவுகள்  கூறுகின்றன. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் பல்வேறு அவசர நடவடிக்கைகளை அறிவித்தனர்.

வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவுகளை வழங்குதல் மற்றும் ஆரம்பப் பள்ளிகளை மூடுதல் ஆகியவையும் இதில்  அடங்கும். 

இருப்பினும், நகரை சூழ்ந்துள்ள அடர்த்தியான புகை மூட்டத்தால் நடவடிக்கைகள் குறைந்துள்ளதாகக் கூறிய குடியிருப்பாளர்கள், இப்பகுதியில் உள்ள பலரும் சுகாதாரப் பிரச்சனைகளை தொடர்ந்து எதிர்நோக்கி வருவதாகவும் குறைப்பட்டுக் கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)