கோலாலம்பூர், 07 நவம்பர் (பெர்னாமா) -- தீபகற்பத்தின் வடக்கு பகுதிகள், சபாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் கிழக்கு கடற்கரை மாநிலங்களில் கடந்தாண்டை விட இவ்வாண்டில், வடகிழக்கு பருவமழை 20 முதல் 40 விழுக்காடு கூடுதலாக பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு லா லினா தாக்கத்துடன் ஒரே நேரத்தில் வடகிழக்கு பருவமழையும் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டிருப்பதால் இந்த கூடுதல் மழைப் பொழிவு பதிவு செய்யப்படலாம் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முஹமட் ஹிஷாம் முஹமட் அனிப் தெரிவித்தார்.
''நீண்ட காலத்திலான கணிப்பை நாம் பார்க்கிறோம். கடந்த ஆண்டை விடச் சற்று கூடுதலாக மழை பெறும் என்று பெரும்பாலான மாதிரிகள் காட்டுகின்றன. குறிப்பாகத் தீபகற்பத்தின் வடக்கு பகுதிகளில்,'' என்றார் அவர்.
வியாழக்கிழமை, பெர்னாமா வானொலியில் ஒலியேறிய நேர்காணலில் கலந்து கொண்டப் பின்னர் டாக்டர் முஹமட் செய்தியாளர்களிடம் பேசினார்.
அண்மையத் ஆராய்ச்சியின் அடிப்படையில் நாட்டில் லா நினாவின் தாக்கம் பலவீனம் முதல் மிதமான அளவிலேயே இருக்கும் என்றும், அது மழைப்பொழிவின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
மலேசிய வானிலை ஆய்வு மையம் போன்ற உண்மையான நிலவரங்களின்படி, வானிலை தொடர்பான மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று முஹமட் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]