ஷா ஆலம், 22 ஏப்ரல் (பெர்னாமா) -- சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 396 குடும்பத் தலைவர்களுக்கு மூன்று மாத வீட்டு வாடகைக்கான உதவிநிதி வரும் வியாழக்கிழமை ஒப்படைக்கப்படும்.
அதோடு, பாதிக்கப்பட்ட வீடுகள் புதுப்பிக்கப்படும் செயல்முறை குறித்தும் குடியிருப்பாளர்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 396 குடும்பத் தலைவர்களுக்கு வீட்டு வாடகையாக மாதத்திற்கு 2,000 ரிங்கிட் உதவிநிதி ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ அமிருடின் முன்னதாக அறிவித்திருந்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட வீடுகளை பழுதுபார்க்கும் பணிகளுக்கு பெரியளவிலான ஒதுக்கீடு தேவைப்படுவதால், அதன் தொடர்பிலான பரிந்துரையை மத்திய அரசாங்கத்திற்கு தமது தரப்பு அனுப்பியுள்ள கூடுதல் தகவலையும் அமிருடின் பகிர்ந்துகொண்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]