சவூதி அரேபியா, 12 நவம்பர் (பெர்னாமா) -- மலேசியாவிற்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையில் ஆழமான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் பொருட்டு, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர் நிலையில் முதல் ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்துவதற்கு மலேசியா தயாராக உள்ளது.
பட்டத்து இளவரசரும் சவூதி அரேபியாவின் பிரதமருமான முஹம்ட் சல்மான் அசிஸ் அல்-சவுத் உடனான சந்திப்பின்போது அவ்விவகாரம் தொடர்பில் அறிவித்ததாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் மலேசியா - சவூதி அரேபியா உறவை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து அச்சந்திப்பில் தாங்கள் விவாதித்ததாக பிரதமர் கூறினார்.
அதுமட்டுமின்றி, புதிய துறைகளான செயற்கை நுண்ணறிவு, ஏஐ, பசுமை பொருளாதாரம், தூய ஆற்றல் மற்றும் பெட்ரோ வேதியியல் ஆகியவற்றிலும் ஒத்துழைப்பை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மலேசியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவு, ஒட்டுமொத்த மலேசியர்களின் வளத்திற்கு பங்களிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)