பாகு, 12 நவம்பர் (பெர்னாமா) -- இரண்டு வார COP29 பருவநிலை மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள், கரிம தரத்திற்கான தரநிலைக்கு அனுமதி அளித்துள்ளன.
இது, பசுமைக்குடில் எரிவாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கும் ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா ஆதரவளிக்கும் உலகளாவிய கரிம சந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும்.
அசர்பைஜான், பாகுவில் ஐ.நா மாநாட்டின் தொடக்க நாளில் ஆரம்பத்திலேயே இந்த அனுமதி கிடைத்துள்ளது.
பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் ஐ.நா-ஆதரவு கொண்ட உலகளாவிய கரிம சந்தையை அடுத்த ஆண்டு விரைவில் தொடங்க பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6.4 இல் உள்ள ஒப்பந்தம் அனுமதிக்கும்.
கரியமிலவாயு வெளியேற்றத்தை குறைக்கும் அல்லது வளிமண்டலத்தில் இருந்து அகற்றும் திட்டங்களுக்கு நிதியளிக்க நாடுகள் அல்லது நிறுவனங்களுக்கு கரிம வரவுகள் கோட்பாட்டளவில் அனுமதி அளித்துள்ளது.
கரியமிலவாயுயை ஈர்க்கும் சதுப்பு நிலங்களை வளர்ப்பது அல்லது ஏழ்மையான மற்றும் கிராமப்புற பகுதிகளில் மாசுபடுத்தும் சமையல் முறைகளுக்கு பதிலாக சுத்தமான அடுப்புகளை விநியோகிப்பது ஆகியவை அத்திட்டங்களில் அடங்கும்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]