துரின், 12 நவம்பர் (பெர்னாமா) -- தமது சொந்த மண்ணில் ஏ.டி.பி வெற்றியாளர் கிண்ணத்தை யன்னிக் சின்னர் கையில் ஏந்தி பெருமையாக கொண்டாடினார்.
1973-லிருந்து, அனைத்துலக ஒற்றையர் போட்டிகளில் உலகின் முதல் நிலையை அடைந்த இத்தாலிய விளையாட்டாளராக சின்னர் திகழ்கின்றார்.
இந்த பட்டத்தை கைப்பற்றியவர்களின் வரிசையில் சின்னர் 19-வது ஆட்டக்காரர் ஆவார்.
குறிப்பாக, நோவக் ஜோகோவிச், ரஃபாயல் நடால் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் ஆகிய மூன்று சாதனையாளர்களை அடுத்து அவர் இந்த அங்கீகாரத்தைப் பெறுகிறார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]