கோலாலம்பூர், 13 நவம்பர் (பெர்னாமா) -- 2010ஆம் ஆண்டு தகவல் வழங்குபவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பைப் பெற விரும்பும் எந்தவொரு நபரும், முன்னதாக எந்தவொரு குற்றத்தையும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும்.
சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்ட சட்டத்தில் அது இடம்பெற்றுள்ளதாக சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
''தாங்கள் ஊடகத்திடம் பேச வேண்டும் என்று ஒருவர் நினைத்தால் மற்றும் பாதுகாப்பை பெற விரும்பினால், அதை நிறுவனமே நிர்ணயிக்கும். இதற்கு காரணம் அவர்களின் என்ன தகவல் உள்ளது என்று நிறுவனம் மதிப்பிட வேண்டும்,'' என்றார் அவர்.
இன்று, 2024 அனைத்துலக நடுவர் மன்றத்தைத் தொடக்கி வைத்தப் பின்னர் அசாலினா அவ்வாறு குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)