கோலாலம்பூர், டிசம்பர் 04 (பெர்னாமா) -- சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறார்களின் வயது வரம்பிற்கு ஏற்ற உள்ளடக்கம் மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்.சி.எம்.சி 2025ஆம் ஆண்டு இணையப் பாதுகாப்பு சட்டம் சட்டம் 866இன் கீழ் பத்து துணைச் சட்டங்களை உருவாக்கி வருகிறது.
16 வயதுக்குட்பட்ட பயனர்கள் சமூக ஊடக தளங்களை அணுக முடியாது என்பதை உறுதி செய்வதற்காகத் துணைச் சட்டங்களின் கீழ் வழங்குநர்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்று இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதில் பதிவில் தொடர்பு அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
18 வயதுக்குட்பட்ட பயனர்களிக்காக வெளியிடப்படும் உள்ளடக்கம் அவர்களின் வயதுக்குப் பொருத்தமானதாக இருப்பதைச் சேவை வழங்குநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
அதோடு, சமூக வழிகாட்டுதல்கள் அல்லது பயன்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப பெற்றோர் கட்டுப்பாடு மற்றும் அமைப்பு விருப்பங்களைச் சமூக ஊடக வழங்குநர்கள் வழங்க வேண்டும் என்று எம்.சி.எம்.சி தெரிவித்தது.
இதனிடையே, இணைய சேவை மற்றும் சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கான விதிமுறைகளையும் எம்.சி.எம்.சி வெளியிட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)