தூரின்,13 நவம்பர் (பெர்னாமா) -- ATP உலகத் தொடர் டென்னிஸ் போட்டி.
நேற்று நடைபெற்ற குழு அளவிலான ஆட்டத்தில் வெற்றி பெற்று இத்தாலியின் யானிக் சின்னர் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸூடன் யானிக் சின்னர் விளையாடினார்.
இவ்வாட்டத்தில், 6-4 6-4 என்ற நேரடி செட்களில், உபசரணை நாட்டின் யானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
இவர்களின் ஆட்டம் 1 மணி நேரம் 40-ஆவது நிமிடம் வரை நீடித்தது.
இதனிடையே, ரஷ்யாவின்டேனியல் மெட்வெடேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார்வுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற நேரடி செட்களில் தோற்கடித்து குழு அளவிலான தமது முதல் வெற்றியை டேனியல் மெட்வெடேவ் பதிவு செய்துள்ளார்.
நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் மெட்வெடேவ், சின்னர்வுடன் மோதவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)