வாஷிங்டன் டி.சி., 14 நவம்பர் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டோனல் டிரம்ப், தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் சந்திப்பு நடத்தினார்.
இச்சந்திப்பு நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
''தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட்க்கு வாழ்த்து. நாங்கள் சொன்னது போல், ஒரு சுமூகமான மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். உங்களுக்குத் தேவையானதைச் செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். அவற்றில் சிலவற்றைப் பற்றி இன்று பேசப்படும். மீண்டும் வருக,'' என்று ஜோ பைடன் கூறினார்.
''மிக்க நன்றி. அரசியல் கடினமானது. பல சமயங்களில் இது மிகவும் இனிமையான உலகமாக இருக்காது. ஆனால் இன்று நல்ல நாளாக அமைந்துள்ளது. நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். உங்களால் முடிந்தவரை மிகவும் சுமுகமான மாற்றம் அமையும். அதற்கு ஜோவை மிகவும் பாராட்டுகிறேன்,'' என்றார் டிரம்ப்
இச்சந்திப்பில், அதிகாரம் மாற்றம் குறித்து பேசப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது.
அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி, இரண்டாவது முறையாக டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)