வாஷிங்டன் டி.சி, 24 அக்டோபர் (பெர்னாமா) -- கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும், உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்தார்.
முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் வரி தொடர்பான விளம்பர பிரச்சார அறிக்கையை அந்த அண்டை நாடு திரித்துக் கூறுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வரி விதிப்பு குறித்து எதிர்மறையாகப் பேசும் ரீகனின் விளம்பரங்களைக் கனடா தவறாகப் பயன்படுத்தியதாகவும் அது போலியானது என்றும் அண்மையில் ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை அறிவித்திருந்ததை டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கடுமையான அமெரிக்க வரி விதிப்பிற்குத் தளர்வு வழங்க கோரி கனடா பிரதமர் மார்க் கார்னி டிரம்பைச் சந்தித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த எதிர்பாரா முடிவு வெளிவந்துள்ளது.
1987ஆம் ஆண்டு கனடாவின் வானொலிக்கு ரீகன் வழங்கிய உரையிலிருந்து குரல் மற்றும் காணொளி பதிவுகளை Ontario கூட்டரசு அரசாங்கம் பயன்படுத்தியதாக அந்த அறக்கட்டளைத் தெரிவித்தது.
ரீகன் வழங்கிய உரையைத் திரித்துக் கூறிய அந்த விளம்பரம் சட்ட நடவடிக்கைகளுக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாக டொனல்ட் டிரம்ப் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)