லிமா, 14 நவம்பர் (பெர்னாமா) -- ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா.வை மையமாகக் கொண்டு பலதரப்பு ஒத்துழைப்பிற்கான உறுதிப்பாட்டை மலேசியாவும் பெருவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
உலகளாவிய மற்றும் வட்டார சவால்களை எதிர்கொள்ள பலதரப்பு நிறுவனங்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்த கருத்துகளையும் இவ்விரு நாடுகள் பகிர்ந்து கொண்டன.
பயன் மற்றும் பொறுப்புணர்வை உருவாக்கும் பொருட்டு, உலகளாவிய நிர்வாகத்தில் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் பெரு அதிபர் DINA ERCILIA BOLUARTE ZEGERRA-வும் ஒப்புக்கொண்டனர்.
''இருதரப்பு உறவையும், பலதரப்பு செயல்முறையையும் மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக உங்களது மதிப்புமிக்க தலைவர்களுடன் மதிப்புமிக்க பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நான் எதிர்பார்க்கிறேன்,'' என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்
1986-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கி அமலில் உள்ள இருதரப்பு உறவு குறித்தும் தாங்கள் திருப்தியடைவதாக அன்வாரும் Dina Ercilia-வும் தெரிவித்தனர்.
இன்று தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறும் 31-வது APEC பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள அன்வார் லிமா சென்றுள்ளார்.
2008 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, பெரு மூன்றாவது முறையாக APEC மாநாட்டை ஏற்று நடத்துகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)