கோலாலம்பூர், 14 நவம்பர் (பெர்னாமா) -- மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் இந்திய மாணவர்கள் சங்கம், PANI UM விளையாட்டு போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
14ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விளையாட்டு போட்டி டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மலாயா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர்கள் மத்தியில் விளையாட்டு போட்டிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த களமாகவும் இந்த விளையாட்டு போட்டி அமைவதாக அதன் ஏற்பாட்டாளர் பிரசாத் மணிராஜ் செல்வராஜூ தெரிவித்தார்.
'' காற்பந்து. கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து உட்பட மொத்தம் எட்டு போட்டிகள் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது இதன் நோக்கமாகும்,'' என்றார் அவர்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள்,வரும் நவம்பர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
PANI UM-இன் X, முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் ஆகிய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் பதிவுக்கான செயல்முறைகள் குறித்து இடம் பெற்றிருப்பதாக அவர் விளக்கினார்.
''அதில் நாங்கள் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளோன். அதில் குறிப்பிட்ட 12 கல்லூரிகளின் அடிப்படையில் தங்களது பெயர்களை பதிவு செய்துக் கொள்ளலாம். அதில் பிரதிநிதிகளின் பெயர்களும் தொடர்பு எண்களும் அதில் இருக்கும்,'' என்றார் அவர்.
இந்தப் போட்டியில் சுமார் 500 முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுவதாக பிரசாத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)