லாகூர், 15 நவம்பர் (பெர்னாமா) -- பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு காற்றுத் தூய்மைக்கேடு மோசமாக பதிவாகியிருப்பதால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் கடுமையான சுகாதார அபாயங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
காற்றுத் தூய்மைக்கேட்டை குறைக்கவும், மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்படுகிறது.
வாகனங்களின் கரும்புகை, தொழிற்சாலைகளின் காற்றுத் தூய்மைக்கேடு மற்றும் பயிர்களின் எரிப்பு நடவடிக்கை போன்வற்றால் வெளியேறும் புகை லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதித்துள்ளது.
அதோடு, ஐந்து வயதுக்கு உட்பட்ட ஒரு கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான பிள்ளைகள் ஆபத்தில் உள்ளதாக பாகிஸ்தானில் உள்ள UNICEF பிரதிநிதி அப்துல்ல ஃபடில் கூறியுள்ளார்.
பள்ளிகள் மூடப்படுவதால் கல்விக்கு தடை ஏற்படும் அதேவேளையில் பெரும்பாலான பள்ளிகள் இணைய வசதியைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் தலைநகரான லாகூரின் காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவானதோடு அது தற்போது காற்றுத் தூய்மைகேட்டில் உலகின் மிகவும் மோசமான நகரமாக பட்டியலிப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]