தூரின், 15 நவம்பர் (பெர்னாமா) -- ஏ.எஸ் ரோமா காற்பந்து கிளப்பின் புதிய பயிற்றுநராக கிளாடியோ ரேணியே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பாவின் சில முன்னணி கிளப்புகளின் முன்னாள் பயிற்றுநராக இருந்த கிளாடியோ ஏ.எஸ் ரோமா கிளப்பின் வெற்றிடத்தை நிரப்பும் தகுதியான ஒருவராக இருப்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
அக்கிளப்பின் முன்னாள் நிர்வாகி இவான் ஜூரிக் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கிளப் இவரை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்துள்ளது.
இந்த பருவம் முடியும் வரை ரோமாவை வழிநடத்த 73 வயதுடைய கிளாடியோ ஒப்பந்தமாகி உள்ளார்.
பின்னர் அவர் ஒரு மூத்த நிர்வாக்யாக கிளப்பின் அனைத்து விளையாட்டு விசயங்களிலும் உரிமையாளருக்கு ஆலோசனை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
இப்பருவம் முடிந்தது, புதிய பயிற்றுநருக்கான தேடல் அடுத்த சில மாதங்களில் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)