விளையாட்டு

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தோல்வி

16/11/2024 05:52 PM

டெக்சாஸ்,16 நவம்பர் (பெர்னாமா) -- சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் குத்துச்சண்டை வளையத்தில் களமிறங்கிய குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் தோல்வி கண்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் இளம் வீரர் ஜேக் பாலுடன் அவர் குத்துச்சண்டை போட்டியில் நேருக்கு நேர் மோதினார்.

2005ஆம் ஆண்டு குத்துச் சண்டையில் இருந்து ஓய்வுபெற்ற மைக் டைசன், மீண்டும் தனது 58-வது வயதில் குத்துச் சண்டை போட்டிக்கு திரும்பியதால், இரு வேறு தலைமுறையினருக்கு இடையிலான இந்தப் போட்டி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

8 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 27 வயதான ஜேக் பால், உலகப் புகழ் குத்துச்சண்டை வீரார் மைக் டைசனை வீழ்த்தி அசத்தினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக் டைசன், இதற்கு முன்பு 58 போட்டிகளில் களம் கண்டு அதில் 50இல் வெற்றி பெற்றுள்ளார்.

போட்டிக்குப் பின்னர் பேசிய மைக் டைசன் இதுதான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என்பதை கூறமுடியாது எனவும் தெரிவித்தார்.

போட்டிக்கு முன்னதாக நடந்த அறிமுக விழாவில் ஜேக் பால் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவாலக பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)