லிமா, 16 நவம்பர் (பெர்னாமா) -- ஜி20 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக, நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதிவரை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரேசில் ரியோ டி ஜெனிரோவுக்கு அலுவல் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவருடன் வெறியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹ்மட் ஹசான் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் ஆகியோர் பயணமாகின்றனர்.
பிரேசில் அதிபர் இனாசியோ லுலா டா சில்வா வின் அழைப்பின் பேரில் ஜி20 உச்சநிலை தலைவர்கள் மாநாட்டில் டத்தோ ஶ்ரீ அன்வார் கலந்து கொள்ளவிருக்கின்றார்.
இது மலேசியாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான அரச தந்திர உறவுகளை பிரதிபலிப்பதாக, வெளியுறவு அமைச்சு, சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி தெரிவித்துள்ளது.
நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களில் மலேசியாவின் தீவிர ஈடுபாட்டையும் இது காட்டுவதாக வெளியுறவு அமைச்சு அதில் கூறியது.
சுற்றுச்சூழல் - பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழு ECSWG, மற்றும் உயிரியல் பொருளாதாரத்தில் ஜி20 ஆகியவற்றின் முயற்சியால், பிரேசிலில் தலைமையின் கீழ் மலேசியா இதில் பங்கேற்கிறது.
பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் அன்வார் ஒரு சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)