கோலாலம்பூர், 16 நவம்பர் (பெர்னாமா) -- சுப்பிங், பெர்லிஸில் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள பெர்லிஸ் மேம்பட்ட தொழில் பூங்கா தொடர்புடைய துறைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
4917 கோடி ரிங்கிட் செலவிலான அத்திட்டம் 2027ஆம் ஆண்டு மத்தியில் இருந்து கட்டம் கட்டமாக செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இந்தத் திட்டம் பொது உயர் கல்விக்கழகங்கள் அல்லது TVET எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி தொடர்பான நிறுவனங்களுடனான ஒத்துழைப்பின் மூலம் நாட்டில் அது சம்பந்தப்பட்ட துறைகளை வலுப்படுத்தும் என்று ஃபஹ்மி தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூரில், Sirage Capital மற்றும் Sky Vast நிறுவனங்களுக்கு இடையிலான பெர்லிஸ் மேம்பட்ட தொழில் பூங்கா உள்ளடக்கிய முதன்மை ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியைப் பார்வையிட்டப் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)