சீனா, 17 நவம்பர் (பெர்னாமா) -- சீனாவில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி கல்லூரியில் சனிக்கிழமை, முன்னாள் மாணவர் ஒருவர் கத்தியால் குத்தி 8 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், 17 பேர் காயமடைந்தனர்.
ஜியாங்சு மாநிலத்தின் யிசிங் நகரில் உள்ள வுக்ஸி தொழிற்பயிற்சிப் கல்லூரியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறாததால் தமது பட்டப்படிப்பு சான்றிதழைப் பெறமுடியாமல் போயுள்ளதுது.
அதனால், கோபமடைந்த அவர், இந்தத் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் கைதான சந்தேக நபர், ஒப்புதல் வாக்குமூலமும் வழங்கியுள்ளார்.
காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை விசாரிக்கவும் முயற்சிகள் நடந்து வருவதாக யிசிங் பொது பாதுகாப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)