லிஸ்பன், 17 நவம்பர் (பெர்னாமா) -- உலகக் காற்பந்து அரங்கில் போர்த்துகல் அணிக்காக இரண்டு கோல்கள் அடித்தப் பின்னர் தாம் ஓய்வு பெற போவதாக அதன் கோல் மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் கோடி காட்டியுள்ளார்.
கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த ஆட்டக்காரரான 39 வயதான ரொனால்டோ இதுவரை 900க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்போர்ட்டிங் லிஸ்பன், மென்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் ஜுவென்டஸ் ஆகிய கிளப்களில் முன்னணி தாக்குதல் ஆட்டக்காட்ரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப்பில் இணைந்துள்ளார்.
ஐந்து முறை பலோன் டி'ஓர் விருதை வென்ற அவர், நேற்று UEFA வெற்றியாளர் லீக்கில் போலந்துக்கு எதிராக 5-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகலை வெற்றி பெறச் செய்தார்.
அதில், இரண்டாம் பாதியின் இரு கோல்களை ரொனால்டோ அடித்தார்.
இதன்வழி, 215 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் தனது அனைத்துலக கோல் எண்ணிக்கையை 135ஆக உயர்த்தினார்.
இப்போட்டிக்குப் பிறகும் காற்பந்தின் மீதான தமது கவனம் இருக்கும் என்றாலும் பயிற்றுநராகும் எண்ணம் தமக்கில்லை என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)