பொது

பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

19/11/2024 04:05 PM

ரியோ டி ஜெனிரோ, 19 நவம்பர் (பெர்னாமா) - ஜி-20 உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு பிரேசில் ரியோ டி ஜெனிரோவிற்கு சென்றுள்ள பிரதமர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுடன்  சந்திப்பு நடத்தினார்.

இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இவ்விரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு AI போன்று பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட  விவகாரங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக  மலேசிய செய்தியாளர்களிடம் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார். 

கூடுதலாக, 2025 ஆசியான் தலைவராக பொறுப்பேற்கும் மலேசியாவின் பங்களிப்பு தொடர்பிலும் அவர்கள் இருவரும் விவாதித்துள்ளனர்.

அதோடு, ஆசியான்-பிரான்ஸ் மேம்பாட்டு ஒத்துழைப்பு மூலம் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் அளித்த ஆதரவையும் பிரதமர் வரவேற்றுள்ளார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)