தூரின், 19 நவம்பர் (பெர்னாமா) -- BJK எனும் Billie Jean King கிண்ண டென்னிஸ் போட்டியில், போலாந்தை பின்னுக்குத் தள்ளி இத்தாலி வெற்றி கண்டுள்ளது.
இன்று அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், போலாந்தின் ஈகா ஸ்வீடேக் அணியை 2-1 என்ற புள்ளிகளில் வீழ்த்தி இத்தாலி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான அவர் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் போலினியை முதலில் தோற்கடித்தார்.
ஆனால், ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் வெற்றியாளரான ஸ்வீடேக்கை, போலினியை இரட்டையர் பிரிவில் வீழ்த்தினார் .
அதில், இத்தாலியின் மூத்த ஆட்டக்காரர் சாரா எராணி உடன் சேர்ந்து போலினியை 7-5, 7-5 எனும் நேரடி செட்களில், ஸ்வீடேக்-கட்ஸ்ரியா காவா ஜோடியைத் தோற்கடித்தார்.
முன்னதாக நடைபெற்ற மற்றுமொரு தனிநபர் பிரிவில், இத்தாலியின் லூசியா புரோசிட்டியும் 6-4, 7-6 என்ற நேரடி செட்களில், போலாந்தின் மக்டா லிம்னியை தோல்வி அடையச் செய்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)