ஷென்சென், 19 நவம்பர் (பெர்னாமா) -- இன்று தொடக்கம் கண்டுள்ள சீனா மாஸ்டர்ஸ் பொது பூப்பந்து போட்டி.
முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று, தேசிய ஆடவர் இரட்டையரான ஆரோன் சியா - சோ வூய் இக் இரண்டாம் ஆட்டத்திற்கு தேர்வாகினார்.
இந்தோனேசியாவின் ஷோஹிபுல் ஃபிக்ரி - டேனில் மார்த்தின் ஜோடியுடன் ஆரோன் சியா - சோ வூய் விளையாடினர்.
39 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இவ்வாட்டத்தில்,ஆரோன் சியா - சோ வூய் ஜோடி, 21-12, 21-18 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றனர்.
அடுத்த ஆட்டத்தில் அவர்கள், தனது சகாக்களான நூர் அஸ்ரின் ஆயோப் - தான் வீ கியோங் உடன் மோதவுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், நூர் அஸ்ரின் அயோப் - வி கிடோங் ஜோடி, தாய்லாந்தின் பீராட்சி ஷூக்புன் - பாக்காபொன் தீராரட்சாகுள் உடன் களம் கண்டனர்.
இதில் 21-19, 21-15 என்ற புள்ளிகளில் நூர் அஸ்ரின் - வீ கியோங் வெற்றி பெற்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)