பொது

கெமாமானில் வெள்ளம்; மக்கள் நிவாரண மையங்களுக்கு மாற்றம்

19/11/2024 08:02 PM

கோல திரெங்கானு, 19 நவம்பர் (பெர்னாமா) -- நேற்று இரவு தொடங்கி பெய்த மழையைத் தொடர்ந்து திரெங்கானு, கெமாமான் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டது.

இரு குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் தற்காலிக நிவாரண மையம் பி.பி.எஸ்-க்கு மாற்றப்பட்டுள்ளதாக திரெங்கானு பேரிடர் நிர்வகிப்பு செயல்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை திரெங்கானுவின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

முன்னதாக, கிஜால் மற்றும் கெமாசிக் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் மட்டம் அதிகரிப்பதாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்திருந்தார்.

நீர் மட்டம் அதிகரிப்பதால் இடமாற்றம் செய்வதற்கு தயாராக இருக்கும்படி அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)