உலகம்

கைது உத்தரவைப் பிறப்பித்து ஐ.சி.சி-இன் முன்னெடுப்பிற்கு ஐ.நா ஆதரவு

22/11/2024 05:19 PM

ஜெனிவா, 22 நவம்பர் (பெர்னாமா) -- இஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் யோவ் கேலன்ட்க்கு எதிரான கைது உத்தரவை பிறப்பித்து தனது கடமையைத் தொடரும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஐசிசி-இன் முன்னெடுப்பை ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஐ.நா மனித உரிமை அலுவலகம் ஆதரித்துள்ளது.

தமது அதிகாரத்தில் உள்ள சூழ்நிலை மற்றும் வழக்குகள் போன்ற அனைத்தையும் கடந்து ரோம் சட்டத்தின் கீழ், ஐசிசி-இன் சுதந்திரத்திற்கும் தகுதிக்கும் தங்கள் தரப்பு மதிப்பளிப்பதாக அதன் பேச்சாளர் ஜெர்மி லாரன்ஸ் கூறினார்.

அதுமட்டுமின்றி, ஐசிசி-இன் கைது உத்தரவை வரவேற்பதாக இங்கிலாந்திற்கான பாலஸ்தீன தூதர் ஹுசம் சோமோட் குறிப்பிட்டார்.

அது பாலஸ்தீனத்திற்கான கடப்பாடு மற்றும் நீதியை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கை என்று அவர் வகைப்படுத்தியுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)